பக்கம்:பாரதியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் எதிர்க்கும் திறன் இவன் ஆயினேன் ஓங்கு காதல் தழல் எவ்வளவு என்றன் உளம் எரித்துடது என்பதும் கண்டிலேன்." பாரதியின் வருத்தமும் ஏக்கமும் நிசமானது என்பதை 'மதனன் செய்யும் மயக்கம் ஒருவயின், மாக்கள் செய்யும் பிணிப்பு மற்றோர் வயின் இதனில் பன்னிரண்டாட்டை இளைஞனுக்கும் என்னை வேண்டும்” என்று புறப்படும் கோபம். "சாத்திரங்கள் சிரியைகள் பூசைகள் சகுணம் மந்திரம் தாலி, மணியெலாம் யாத்து எனைக் கொலை செய்தனர்” என்னும்போது வெடிக்கிறது. பாரதி சுயசரிதையை முடிக்கும்போதுகூட, 'உலகெலாம் பெருங்கனவு அஃதுளே உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவிலும் கனவாகும் என்று சொல்லிவிட்டு கடைசியில் பரம்பொருளிடம் அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்தில் அன்பின் வெள்ளம், பொறிகள் மீது தனியரசானை பொழுதெலாம் கருமயோகத்தில் நிலைத்திடல் வேண்டும் என்று கேட்டு முடிக்கிறார். பாரதியின் சுயசரிதையைப் படித்ததும் என் நெஞ்சில் எழுந்த கேள்விகள், யார் அந்தப் பெண்? சுயசரிதையை எப்போது எழுதினார்? சுயசரிதையில் வெளிப்படும் பாரதி ஆசாபாசங்கள் மிக்க மனிதராக தந்தைக்கு பயந்தவராக அவர் கட்டாயப்படி காதலை மறந்து கல்யாணம் செய்து கொண்டவராக வெளிப்படுகிறார். முழுவதும் படித்துப் பாருங்கள். 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/97&oldid=817333" இலிருந்து மீள்விக்கப்பட்டது