பக்கம்:பாரதியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - வள்ளத்தோள் கவிதைகளில் தேசியம் சிற்பி பாலசுப்பிரமணியம் தனது வேர்களைத் தானே ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ கண்டுணர்ந்து தனது ஆன்மாவைத் தானே தெரிந்து தெளியும் உணர்வு தேசிய உணர்வாகும். ஜனநாயக லட்சியங் களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போக்குகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய முற்போக்கு இயக்கம் தேசியம். இன்னும் இதனை விளக்க டாக்டர் கே.என். பணிக்கரின் கருத்து துணைபுரிகின்றது. தேசியத்தின் உள்ளடக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும் அரசியல் இயக்கத்தோடும் போராட்டத்தோடும் எல்லைக் கோடு போடக்கூடியது அல்ல. சமூகத்தின் நிலைபேறும், முயற்சிகளும் முழு அளவில் தேசியம் தழுவியதாகும். ஏனெனில் காலனி ஆதிக்கம் அரசியல் மேலாதிக்கத்தையும் தாண்டி, கலாச்சார அறிவுத்துறைகளின் மீதும் பேராதிக்கம் செலுத்திய சக்தியாகும்.' எனவே காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டம் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மட்டுமல்லாது கலாச்சார 'டாக்டர் கே.என்.பணிக்கர் - Cultural and Intellectual implication of Nationalism: Wallathol's Poetic world. Mainstream 30 Dec. 1978. 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/98&oldid=817334" இலிருந்து மீள்விக்கப்பட்டது