பக்கம்:பாரதியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுத்துறை அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையை நாடி நிற்கும் இலக்கு உடையது. இந்தச் சிறப்புமிக்க தேசியப் பண்பு, பாரதி வள்ளத்தோள் தேசிய கவிதைகளின் சாரமும் சக்தியுமாகத் திகழக் G; sTGððfóU sTLD. தேசிய எழுச்சியை ஆற்றலோடும் வல்லமையோடும் இவ்விரு கவிஞர்களும் சித்திரித்திருந்த போதிலும், தேசிய உண்ர்வு இப்படைப்பாளிகளிடம் ஒரே மாதிரி தோன்றி வளர்ந்ததெனச் சொல்ல முடியவில்லை. ஏறத்தாழ பாரதியின் கவிதைகளில் மூன்றில் ஒரு பங்கு (226 கவிதைகளில் 75) தேசியத்தைப் பொருளாகக் கொண்டவை. வள்ளத்தோள் எழுதிக் குவித்துள்ள ஏராளமான கவிதைகளில் (அவரது சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் தவிர்த்து) நான்கில் ஒரு பகுதி தேசிய உள்ளடக்கம் வாய்ந்தவை. வள்ளத் தோளுடன் (1878 - 1957) ஒப்பிடும்போது மிகக் குறைந்த காலமே வாழ்ந்த பாரதியின் (1882 - 1921) தேசியப் பார்வை முன்னதாகவே அரும்பி அதிவேகமாக வளர்ந்து குறுகிய காலத்துக்குள்ளாகவே கனிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நமக்குக் கிடைக்கிற வரலாற்றுக் குறிப்புக்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது, முதன் முதலில் அச்சில் வெளிவந்த பாரதியின் தேசியக்கவிதை சுதேசமித்திரனில் 15-9-1905-இல் வங்கமே வாழிய' என்னும் தலைப்பில் வந்த கவிதை. அவரது தேசியக் கவிதைகளின் முதல் தொகுப்பான ஸ்வதேச கீதங்கள் 1908-இல் வெளியிடப்பட்டது. கைணிக்கர குமார பிள்ளையால்' தயாரிக்கப்பட்ட வள்ளத்தோள் காலம் காட்டி யின் படி, வள்ளத் தோளின் முதல் தேசியக் கவிதை, 'மாத்ரு பூமியோடெ' வெளிவந்த ஆண்டு 1917. இதிலிருந்து தேசியக் கவிதைகளை உருவாக்குவதில், வள்ளத்தோளைவிட வயதில் இளையவராயிருந்தும், பாரதி முன்னோடியாக விளங்கினார் என்று தெரிகிறது. தேசிய நீரோட் டத்தில் இணைந்து செல்ல பாரதியைக் காட்டிலும் வள்ளத்தோள் பத்தாண்டுக் காலம் பின்தங்கியிருக்கிறார் என்பது புலனாகின்றது. வள்ளத்தோளின் இந்தத் தாமதமான வருகைக்கு பின்வரும் காரணங்கள் அமைந்திருக்கக்கூடும்: "வள்ளத்தோள் பிரதிபா ப. 20-29N.E.S. 1979. 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/99&oldid=817335" இலிருந்து மீள்விக்கப்பட்டது