பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வராத பேர் : - கோமதி நாயகம் பிள்ளை, மாரப்ப முதலியார். எலிக்குஞ்சு செட்டியார் : இன்று சபாநாயகராக இருக்கும்படி காளிதாஸரை வேண்டுகிறேன். காளிதாஸன் : எனக்குச் சம்மதமில்லை. வெங்கட்ட ராவைப் போடுங்கள். எலிக்குஞ்சு செட்டியார் : காளிதாஸ்ரே சபாநாயக ராக வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளு கிறேன். ஜிந்தாமியான் சேட் : எனக்கு அதுவே சம்மதம். குமாரசாமி வாத்தியார் : எனக்கும் அப்படியே. சபையாரின் பொது வேண்டுகோளின்படி காளிதாஸன் அக்கிராசனம் வகித்தார். எலிக்குஞ்சு செட்டியார் : சபாநாயகரே, விவகாரம் ஆரம்பிக்கலாமா? சபாநாயகர் : அப்படியே செய்யலாம். எலிக்குஞ்சு செட்டியார் : இந்தக் காளிதாஸரை நமது சபையைவிட்டு நீக்கிவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதைச் சபையார் அங்கீகாரம் செய்ய வேண்டும். குமாரசாமி வாத்தியார் : ஏன் காணும், செட்டி யாரே, என்ன காரணம்? ஜிந்தாமியான் சேட் : செட்டியார் மனத்தில் இந்தக் கருத்திருக்கும்போது அவர் காளிதாஸரை இன்று சபா நாயகராக இருக்கும்படி கேட்டது கேலிதானே? நமது சபையில் இப்படி நாணயக் குறைவான கேலிகள் செய் விதைப் பார்த்தால் எனக்கு அருவருப்புண்டாகிறது.