பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 நிபுணர். பெரிய பெரிய மிருதங்கக்காரரெல்லாம் இவரைக் கண்டால் பயப்படுவார்கள். இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னல் மூன்ரு வது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்து வேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு மணிவரை தன் வீட்டுத் திண்ணையில் சினேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது, கர்ஜனை செய்துகொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பிக் கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கி விடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார், இடிப்பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்திருக் கிருர்கள். அந்த இடிப்பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலை தோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்நேகமுண்டு. நானும் அடிக்கடி இடிப்பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம முடர்களென்று அவர் சொல்லும் வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்துகொள்வது கிடையாது. மற்ற படி, அநேக விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும். நாலா நாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மழைத் இாற்றலாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப் போகாமல், பொழுது போக்கும் பொருட்டாக மேற் படிப் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே பிாத்தியார் சர்ஜனை அட்டஹாஸ்மாக நடந்து கொண்