பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்துகொண்டு வாயில் கொழு கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை. என்று வேதவல்லி. சொன்ள்ை. "ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்' என்று ராமராயர் சொன்னர். வேதவல்லி யம்மை யொன்னர் : - 'ஆனி பெஸண் டுக்கு ஸ்மானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்த அம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?" இதைக் கேட்டவுடன் ராமராயர், "நான் வீட்டுக்குப் போய்விட்டு.வருகிறேன்' என்று சொல்லி எழுந்து நின்ருர், நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசி யாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளை களை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமரா, ரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லி அம்மையின் உபந்யாஸம் நடக்கிறது : 'ஹிந்து ஸ்திரீகள் ராஜ்யவிவகாரங்களிற் சேர்ந்: பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு ఎ@5 ஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்து புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளி வாசித்திருக்கிருேம். ஆனல் இப்போதுள்ள புருஷரை பற்றிப் பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்