இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164
பாரதியார் கதைகள்
கேட்டால், க்ஷணம்கூட பொறுக்கமாட்டான். யுத்தம் வருவது நிச்சயம்” என்று சொன்னாள்.
இது கேட்ட குண்டோதர சிங்க மகா சிங்கராயன் “எனது சிப்பாய்களால் கைதி செய்யப்பட்ட வீரவர்மனுடைய செவிலித்தாயின் நாமம் யாது?“ என்று வினவினான்.
“நரிச்சி நல்ல தங்கையம்மன்” என்று விருத்திமதி சொன்னாள்.
இதைக் கேட்ட குண்டோதர சிங்கராய மகாசிங்கன் கட கட கட கட கட கட வென்று சிரிக்க ஆரம்பித்தான்.
★