பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சில வேடிக்கைக் கதைகள்

ஆனைக்கால் உதை

ரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு. போகும்போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமான காலைக் காட்டிப் ” பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன் ஜாக்கிரதை!” என்பான்.

”சாதாரணக் காலால் அடித்தால்கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக் காலால் அடிபட்டால் நாம் செத்தே போவோம்” என்று பயந்து பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.

இப்படி யிருக்கையில் ஒருநாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப்போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகல வென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி ”அடே, எல்லோரும்