பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

பாரதியார் தாம் எடுத்துக்கொண்ட பொருளை மக்கள் உள்ளத்தில் ஊருவிப் பாய்ந்து தொழிற்படும் முறையில் கதைகள் மூலம் உணர்த்தினார். அது மட்டுமல்ல - பாரதியார் பாமரமக்களின் உள்ளத்து எழுச்சி களையும், உணர்ச்சிகளையும் தம் கதைகளிலே எதிரொலிக்கவும் செய்தார்.

பாரதியார் எழுதிய கதைகள் எல்லாமே ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புக் கொண்டவை. அறிவு விளக்கம் தருவதையே தமது நோக்கமாகச் கொண்டிருந்தார் மகாகவி. அவர் வெறும் பொழுதைப் போக்குவதற்காக கதைகள் எழுதவில்லை. நீதியும் தர்மமும் நிலைப்பதற்கென்றே பல கதைகளை எழுதினார்.

தமிழ் இலக்கிய உலகில் என்றும் ஒளியோடும் சிறப்போடும் திகழும் கதைப் பொக்கிஷம் பாரதியார் கதைகள் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.


அன்புள்ள
பூம்புகார் பிரசுரத்தார்