பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாரதியார் கதைகள்

மானி—“அதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை“

செட்டி—“உம்முடைய தாயார் யோசிக்கவில்லையா?“

மானி—“எனக்குத் தெரியாது.“

செட்டி—“கலியாண விஷயத்திலே தாயார் வார்த்தை தானே கேட்பீர்?“

மானி- "நிச்சயமில்லை.“

செட்டி—“பின், என்ன செய்வீர்?“

மானி—“நான் குடும்ப சம்ரக்ஷணைக்கு முயற்சி வேண்டி அலைகிறேன். தாங்கள் சம்பத்தி லிருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷமாக வார்த்தை சொல்லிக்கொண்டிருக்க நேரமிருக்கிறது. என்னைப் பகவான் அந்த நிலையில் வைக்கவில்லை.“

செட்டி—“ஐயரே! வீட்டுக்குப் போகவேண்டுமா? அவசரமா? இன்று போஜனச் செலவுகளுக்கு ஒன்றும் வேண்டாமோ?“ என்றான்.

இதைக் கேட்டவுடன் மானிக்குக் கோப முண்டாய் விட்டது.

மானி அய்யன் சொல்லுகிறான்:—

“செட்டியாரே, மீனாக்ஷியம்மையின் கிருபையால் நமது வீட்டிலே, இன்னும் அநேக மாதங்களுக்கு வேண்டிய உணவு சேர்த்திருக்கிறேன். என்னுடைய தாயார் பேருக்குக் கொஞ்சம் நிலமும் உண்டு. இவ்விடத்தில் நமது முயற்சி நிறைவேற வழியில்லா விட்டால் வேறிடத்துக்குப் போகலாமே, இங்கிருந்து வீண் வார்த்தை சொல்வது நியாயமில்லை யென்ற கருத்தின்மேல் நான் அவசரப்பட்டேன், அதைத் தவிர வேறொன்றுமில்லை. இப்போது, தாங்கள் கேள்வி கேட்டு வரும் மாதிரியைப் பார்க்கும்போது, இன்னும் சற்று நேரம் இங்கிருந்து தங்களுக்குச் சில விஷயங்கள் சொல்லி விட்டுப் போகலா மென்ற எண்ண முண்டாகிறது. நம்மூர் வியாபாரிகள் விஷயமாக, எனக்குள்ள சில கருத்துக்களைத்