பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவதந்திரக் கதைகள்

89

தங்களைப்போன்ற மனிதரிடம் சொல்லித் தீர்த்தாலொழிய என் மனம் ஆறுதலடைய மாட்டாது. வேலைக்குக் கேட்க வந்த இடத்திலே அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாதென்று நினைத்தேன். தாங்கள் தொளைத்துத் தொளைத்துக் கேட்பதைப் பார்த்தால், தங்களுக்கு இப்போது உல்லாச நேரம் போலே தோன்றுகிறது. ஆகையால் உங்களிடமே சொல்ல லாமென்று தீர்மானம் செய்கிறேன்.“

அதற்கு மாணிக்கஞ் செட்டி—“சொல்லும் ஐயரே, மனதுக்குள் வைத்துக் கொண்டு குமைய வேண்டாம். பணம் தேடி வைத்தவர்களைத் தேடத் திறமில்லாதவர் எப்படிக்கெல்லாம் சீர்திருத்த உத்தேசங் கொண்டிருக்கிறார்களென்பதைக் கண்டுபிடிப்பதிலே எனக்கும் ருசியுண்டு. சொல்லும், உம்முடைய கொள்கைகளைக் கேட்போம்“ என்றான்.

மானி அய்யன்—“வடக்கு தேசத்திலிருந்து சில வியாபாரிகள் இங்கே அடிக்கடி வருகிறார்கள். அவர்களுடன் நான் கொஞ்சம் வழக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ள வியாபாரத் திறமையும் புத்தி நுட்பமும் நம்மூர் வியாபாரிகளிடமில்லை. இது முதலாவது சொல்ல வேண்டிய விஷயம். இவ்விடத்து வியாபாரிகளிடம் இருக்கிற கருவத்துக்குத் தகுந்தபடி புத்திசாலித்தனமில்லை. இனி, இரண்டாவது விஷயம் சொல்லுகிறேன். க்ஷேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தாலொழிய வியாபாரம் செழிக்காது. வியாபாரத்துக்கு மகிமை வரவேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வேண்டும். இந்த விஷயம் இதுவரை தங்களிடம் எவனும் சொல்லியிருக்க மாட்டான்.“

மாணிக்கஞ் செட்டி—“எனக்கே தெரியும். இந்த ரகஸ்யம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. சரி, மேலே கதையை நடத்தும்.“

மானி அய்யன்—“கதையில்லை, செட்டியாரே, காரியம். இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக்

பா. க.—6