பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

13

றது. அதற்குத் தடையாகக் குரக்கனும் மாடனும் முறையே குரங்காகவும் மாடாகவும் பொய்த் தோற்றம் காட்டிப் புன்மைப் பேய்களாகத் திரிகின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சித்தாந்த உண்மைகளாகிய பதி—பசு—பாச இலக்கணத்தைக் கவிஞர் பொருத்திக் காட்டுவதாகக் கருத்தூன்றிக் காணலாம்.

ஆணவம், கன்மை, மாயை என்னும் பாசங்களோடு கட்டுண்டுழலும் உயிராகிய பசு, அக் கட்டுக்களினின்று விடுபட்டு, இறைவனாகிய பதியை அடைய வேண்டும். இதுவே சமயத் தத்துவமாகிய கித்தாந்த உண்மை. முற்பிறப்பில் சின்னக்குயிலியாகிய பசு, சோமன்னன் மகனாகிய பதியை அடைய விழையும்போது, மாடனும் குரங்கனும் பாரமாக நின்று தடைசெய்கின்றனர். மாடன்பால் காட்டும் அன்பும் பெற்றோர்மீது கொள்ளும் பற்றும் ஆங்கு மாயையாக நின்று தடுக்கின்றன. இப் பிறப்பில் குயிலாகிய பசு, கவிஞாகிய பதியை நாடுகிறது. ஆனால் பேய்களாகிய குரங்கும் மாடும் ஆணவகன்ம மலங்களாகவும் காதல் மாயையாகவும் நின்று தடுக்கின்றன. எனவே, மும்மலங்களிற் சிக்குண்டு உழலும் ஆன்மா, பதியாகிய இறைவனையடைந்து அந்தமில் இன்பத்தைத் தூய்த்தற்கு எத்துணை முயன்றாலும் காதலாம் மாயையின் கட்டினால் ஆணவம், கன்மம் இவற்றினின் விடுபட முடியால் பெரிதும் இடர்ப்படும் எனத் தெளியலாம்.

‘அவா என்ப(து) எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து’

ஆசையோ பிறப்பிற்கு வித்தாவது என்றும்,

‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
காமம் கெடக்கெடும் நோய்’

அவ்வாசை யொழியவே பிறவித்துன்பம் அற்றொழியும் என்றும் இக் குயிற்பாட்டால் கவிஞர் பாரதியார் பாருலக

மக்கட்குச் சீரிய வேதாந்த உண்மையினை விளக்குப் போந்தார்.