பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நூலாசிரியர் வரலாறு 'குயிற் பாட்டு என்னும் இச்சிறு நூலே இயற்றிய ஆசிரியர் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியார் ஆவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டைய புரம் என்னும் ஊரில் பார்ப்பனர் குலத்தில் தோன்றியவர். இவருடைய பெற்ருேர் சின்னச்சாமி ஐயர், இலக்குமீ பம்மாள் என்போர் ஆவர். இவர் கி. பி. 1882 ஆம் ஆண்டு, திசம்பர் 11 ஆம் நாள் (கார்த்திகைத் திங்கள் மூல காள்) பிறந்தார். இவர் தமது ஐந்தாம் வயதில் தாயை இழக்கார் அதனுல் இவர் தந்தையார் 1889 இல் வள்ளியம்மாள் என்னும் வனிதையரை மறுமணம் புரிந்து கொண்டார். இந்த அம்மையாசே பாரதியாரைச் சீருடன் போற்றி வளர்த்த செவிலித்தாய் ஆவர். பாரதியாருக்கும். ‘பாரேதி' என்னும் ஒரு சகோதரியும் இருந்தார். தந்தையாராகிய சின்னச்சாமி ஐயர் சிறந்த தமிழ்ப் புலமை யுடையவராதலின் பாரதியார் அவரிடமே ஆரம்பக் கல்வியைப் பெற்ருர். இவர் தமது இளம்பருவங் தொட்டே இனிய செய்யுட்களே இயற்றி வந்தார். ஆதலின் இவரது பத்தாண்டுப் பருவத்தில் எட்டையபுர மன்னர், புலவர் பலர் கூடிய தமது அரசவையில் இவருக்குப் 'பாரதி என்ற பட்டத்தைச் சூட்டிப் பாராட்டினர் 1894 இல் திருநெல் வேலி இந்துக் கலாசாலேயில் கல்வி பயிலத் தொடங்கிய பாரதியார் அங்கு ஐந்தாம் படிவம் வரை (ஒன்பதாம் வகுப்பு) வரையில் பயின் ருர், இவர் திருநெல்வேலியில் கல்வி கற்கும் காலத்திலேயே 1897 சூன் 15 ஆம் நாளில் கடையம் செல்லப்பா ஐயரின் மகளார் செல்லம்மாளேத் திருமணம் புரிந்து கொண்டார். 1898 சூன் மாதம் தந்தையார் காலமான காரணத் தால் பாரதியார், காசியில் வாழ்ந்து வந்த தம் அத்தையார் குப்பம்மாளின் ஆதரவில் 1898 இல் காசி இந்துக் கலாசாலே