நூலாசிரியர் வரலாறு
15
யில் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் அலகபாத்துப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வில் முதல்வராகத் தேறினார். 1902 இல் எட்டையபுர மன்னரின் அழைப்பை அன்புடன் ஏற்று ஆங்கு வந்து சேர்ந்தார். ஆங்கு அரசவைக் கவிஞராகப் பணியேற்று அணிபெற்று விளங்கினார். ஆங்குத் தம் மனைவியுடன் இனிய இல்லறத்தை நடத்தினார். அடுத்த ஆண்டிலேயே அரசவைப் புலவர் பணியினின்று நீங்கி, மதுரைச் சேதுபதி கலாசாலையில் தமிழாசிரியராய்ப் பணியேற்றார். 1904 இல் சென்னை சென்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழுக்குத் துணையாசிரியராய் பணியேற்றார். இந்நாளில்தான் பாரதியாருக்குத் தங்கம்மாள் என்னும் மூத்த மகள் தோன்றினார்.
1967—எப்பிரல் திங்களில் பாரதியார் ‘இந்தியா‘ என்ற செய்தித்தாளின் ஆசிரியரானார். அப்போது ‘பாலபாரதம்‘ என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். 1909 இல் தாம் பாடிய சுதேச கீதங்களை வெளியிட்டார். இந்நாளில் பாரதியார் இந்திய விடுதலைக் கிளர்ச்சியின் காரணமாக நாடு கடத்தப்பட்டுப் புதுச்சேரியில் சென்று வாழலானார். அவர் மனைவி செல்லம்மாளும் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இங்கு வாழ்ந்த காலத்தில்தால் கண்ணன் பாட்டு, ‘குயிற் பாட்டு‘, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் பாரதியார் பாடி வெளியிட்டார். 1918 திசம்பரில் புதுச்சேரியை விட்டுப்புறப்பட்ட பாரதியாரைக் கடலூரில் அரசினர் கைது செய்தனர். அவர் நண்பர்கள் முயற்சியால் விடுதலை பெற்றார்; சில காலம் கடையத்தில் சென்று வாழ்ந்தார். 1920 இல் மீண்டும் ‘சுதேசமித்திரன்‘ துணையாசிரியராய்ச் சென்னை சென்று சேர்ந்தார். 1921 இல் காந்தியடிகளைக் கண்டு அளவளாவி இன்புற்றார்.
பாரதியார் சென்னையில் வாழ்ந்து வந்த பின்னாளில் ஒருநாள் கோவில் யானையொன்றற்குக் கரும்பருந்துங்கால் அதனால் தூக்கி யெறியப்பட்டார். அந்த அதிர்ச்சியால்