பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குயிற் பாட்டு வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வம் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45 சைவ சுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் வானரர் போல் சாதியொன்று மண் ணுலகின் மீதுளதோ 7 வானரர்தம் முள்ளே மணிபோல் உமையடைந்தேன்; பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும் நிச்சயமா முன்புரிந்த தேமத் தவங்களிளுல் 50 தேவரீர் காதல்பெறும் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே ஆவலினுற் பாடுகின்றேன் ; ஆரியரே! கேட்டருள்வீர்.” வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால். காதல் காதல் காதல் ; காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல். நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55 ஆசை ததும்பி அமுதுாறப் பாடியதே. :காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும் பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்று ரைப்பாள் ; வற்றல் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டு) ஆங்கனே, 60 தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும், "ஆவி புருகுதடி, ஆகாகா !” என்பதுவும், கண்ணேச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும் மண்ணேப் பிருண் டியெங்கும் வாரி யிறைப்பதுவும், ஆசைக் குயிலே அரும்பொருளே தெய்வதமே! Ꮾ 5 பேச முடியாப் பெருங் காதல் கொண்டுவிட்டேன்; காதலில்லை யானுல் கணத்திலே சாதலென் ருய் ; காதலினுல் சாகும் கதியினிலே என் ன வைத்தாய் ; எப்பொழுதும் நின்னே இனிப்பிரிவ(து) ஆற்றுகிலேன்; இப்பொழுதே நின்னே முத்த மிட்டுக் களியுறுவேன்.” ”鲁 என்று பல பேசுவதும் என்னுயிரைப் புண் செயவே, கொன்றுவிட எண்ணிக் குரங்கின் மேல் வீசினேன் கைவாளை யாங்கே ; கனவோ ? நனவுகொலோ ? தெய்வ வலியோ சிறுகுரங்(கு)என் வாளுக்குத்