32
குயிற் பாட்டு
தேவர் சினந்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 50 சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன் வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன். குற்றம்நீர் என்மேற்கொணர்ந்ததனை யானறிவேன். குற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம! புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55 மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்கேன், ஐயனே! நின்சொல் மறக்க நெறியில்லை; ஆயிடினும் என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். 60 வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும் அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான் அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65 எக்கதிக்கும் ஆளாவேன்; என்செய்கேன்? வெவ்விதியே!
9. குயில் தனது முன்பிறப்பின் கதையை மொழிதல்
தேவனே! என்னருமைச் செல்வமே? என்னுயிரே!
போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
மாங்கிளையில் ஏதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன்.
5
ஆங்குவந்தார் ஓர் முனிவர். ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார். மற்றதன்பின்,
'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைக்
சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல்
10