குயில்...... கதையை மொழிதல்
33
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றாய் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில்
15
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனென்னும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில்
20
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரில்உன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்,
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன்
25
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்(டு)உனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்.
30
ஆயிழையே, நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேனமலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்,
மொட்டைப் புலியனுந்தன் முத்த மகனான
35
நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம் புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, நின்னேர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன் என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை
40
ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்;
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு,