பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயில்....கதையை மொழிதல்

35

கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்” என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; 80
ஐயனே! உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்;
மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்; 85
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?
வெல்லுதிறல்மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விரைமகளா நாங்கள்குடி போவதில்லைந
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்; தோழியரும் 90
என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?“ என்று நீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி 95
நீ விலகிச் சென்றாய் - நெறியேது சாமியர்க்கே?’
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக;
நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ? என்றனுக்கே
பொன்னை, ஒளிர்மணியே. புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி, 100
நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம்;
நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனொ? வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனதைச் சொல்வேன். எனதுநிரை யுரைப்பேன, 105
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்,
மாதரசே!' என்று வலக் கைதட்டி வாக்களித்தான்;
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்;
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய், 110