பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

குயிற் பாட்டு

காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவிலே
சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்!
சிந்தை கொண்டாய், வேந்தன் மகன், தேனில் விழும் வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115
ஆவலுடன் நின்னை யறக்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே,
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டு குதூகலமாய் 120
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்,
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான்;
பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்!
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை;
மண்ணாக்கி விட்டாள்! என் மானம் தொலைத்துவிட்டாள்! . 125
'நிச்சய தாம்பூலம்' நிலையா நட ந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?”
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் செட்டைக் குரங்கனங்கே;
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி 130
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்: ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135
மாடனங்கு வந்துநின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போல
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை;
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்;
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே;