42
குயிற் பாட்டு
(6-10) பேடே - பெண்பறவையே, திரவியம்-செல்வம், பீழை - துயரம்.
(11-15) மாயச் சொல் - அறிவை மயக்கும் வார்த்தை - காதல் என்னும் சொல், தவித்தல் - வாடுதல், புள் - பறவை, மையல் - காம மயக்கம்.
(16-20) எய்துகிலா - அடையப் பெறாத, நாண் - வெட்கம், கானக்குயிலி - சோலைக்குயில், மானக் குலைவு - வெட்கக் கேடு.
(21 - 25) அவனி - உலகம், சினம் - கோபம்.
(26-30) பேறு - திறமையாகிய செல்வம், நெஞ்ச வழக்கு- மன எண்ணம், கலகல - இரட்டைக்கிளவி.
(31-35) ஓலம் - சத்தம், ஊன் உடம்பு : சினையாகு பெயர், தேன் வாரி - தேனாகிய வெள்ளம் - உருவகம், ஏற்ற நீர்ப் பாட்டு- ஏற்றம் இறைப்பவர் பாடும் இசைப் பாட்டு, 'ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை' என்பது பழமொழி.
(36-40} கோல் தொடியார் - திரண்டவளையல்களையணிந்த பெண்கள், குக்குவென - பாடும் ஒலிக்குறிப்பு, சுண்ணம்-வாசனைப் பொடி, பண்ணை மடவார் - வயலில் வேலை செய்யும் பள்ளியர். கொட்டி - கைகளைக் கொட்டி, கும்மியடித்து. அமுதப்பாட்டு- தேவாமுதம் போன்ற இனிய பாடல்: உவமைத் தொகை.
(41)-45) வேயின் குழல் - புல்லாங்குழல், நா - நாக்கு.
(46 - 50) நெடுநோக்கு - நீண்ட பார்வை, மஞ்சரே - 'மைந்தரே' என்பதன் போலி - வீரரே.
(51 - 55) போழ்து - 'பொழுது' என்பதன் மகுஉ, இன்பச் சுரம் - காதல் நோய்: உருவகம்.
(56-60) பல்லவி - இசைப் பாட்டின் முதல் உறுப்பு: அது திரும்பத் திரும்ப இசைப்பது, விள்ளா - பிளக்குமாறு, திகைப்பு தடுமாற்றம்.
(61 - 65) நெடிது உயிர்த்து — பெருமூச்சு விட்டு, சோதித் திருவிழியீர் ! - ஒளியும் அழகும் பொருந்திய கண்களையுடையவரே, நாவாய் - தோணி.
(66 - 70) அளவளாய் - கலந்து பழகி, பறி கொண்டு - பறித்துக் கொண்டு - கவர்ந்து, பறி - முதனிலைத் தொழிற் பெயர்.