குறிப்புரை
47
(111 - 115) கரைத்தது - உருகுமாறு செய்தது, மயல் காம மயக்கம், புன் பறவை - அற்பப்பறவை, காமவனல் காமத்தீ - உருவகம்.
(116 - 122) சொற்றை - பயனில்லாதது, வயிரிகள் - பகைவர்கள், வேட்கை - காம விருப்பம், கடுந்துயில் - ஆழ்ந்த உறக்கம்.
8. நான்காம் நாள்
(1-5) நயவஞ்சனை - தந்திரமாக ஏமாற்றுதல், வான்காதல் - மிக்க விருப்பம்: உரிச்சொல் தொடர், சதி - சூழ்ச்சி, போந்திட வருமாறு, சித்தத் திகைப்பு - மனத்தடுமாற்றம்.
(6-10) எத்து குயில் - ஏமாற்றிய குயில், தாழ்ச்சி - அவமானம்.
(11-15) இருந்தொலை - நீண்ட தூரம் : இருமை+தொலை பண்புத்தொகை. துலங்கவில்லை - தெரியவில்லை, உயர்மாடம் - மேல் மாடி மேற்றிசை - மேற்குத்திக்கு.
(16 - 20) கடுகி - விரைந்து சென்று.
(21-25) மேனி - உடல், மேவாது - வராது, குறுகி அடைந்து.
(26-30) ஊறு இணைப் புள் - கவலையில்லாத பறவை, மதியில் அறிவில்லாதவன், கொம்பர் - மரக்கொப்பு : கொப்பு என்பதன் மொழியிறுதிப் போலி. செவ்வனே - நன்றாக, பொன்னம் குழலின் - பொன் போன்ற அழகிய பல்லாங் குழலின் இசை போல.
(31-35) குமைந்தேன் - மனம் கொதித்தேன், புலைப்பாட்டு - இழிவான பாட்டு.
(36-40) குறித்தேன் - நினைத்தேன், இளகி - இரக்கங் கொண்டு.
(41-45) பொய்ந்நீர் - பொய்யான கண்ணீர், கடகடென - விரைவாக: 'கடகட' - இரட்டைக் கிளவி, வையம் - உலகம், சித்தமோ - எண்ணமோ.
(46 - 50) அன்றில் - குருவியினத்தைச்சேர்ந்த சிறு பறவை: இவ்வினத்து ஆண் பெண் குருவிகள் ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது. நாண்மலர் - அன்று பூத்த பூ, சரண் புகலி-