48
குயிற் பாட்டு
டம், மதலை குழந்தை, சிற்றுயிர் - சிறுமை + உயிர் : பண்புத் தொகை.
(51 - 55) வெந்தழல் - கொடிய நெருப்பு: வெம்மை + தழல் - பண்புத்தொகை, கூறுகிலேன் - தன்மை யொருமை எதிர்மறை வினை முற்று, பொதி மாடு - மூட்டை சுமக்கும் மாடு.
(56-60) உய்வேன் - பிழைப்பேன், சுமை -பாரம்.
(61 - 66) வெவ்விதியே - கொடிய ஊழ்வினையே: வெம்மை+ விதி - பண்புத்தொகை, வேந்தன் - தலைவனாகிய அரசன், புல்லாக - அற்பமாக.
9. முன் பிறப்பின் கதை மொழிதல்
(1-5) புகல்வது - சொல்லுவது, முடிநீள் பொதிய மலை - உயர்ந்த சிகரத்தையுடைய பொதிய மலை.
(6-10) பரவினேன் - துதித்தேன், ஆதரித்து - விரும்பி, மேதினி - உலகம்.
(11-15) பிறிதாகி - வேறுபட்டு, சித்த நிலை - மன உணர்ச்சி. இது முதல் குயிலின் பழம் பிறப்பினை முனிவர் கூற்றாக அக் குயிலே கூறுகிறது.
(16-20) வீறு - பெருமிதம், கம்பீரம்; வெந்தொழிலார் - கொடிய வேட்டையாடும் தொழிலையுடைய வேடர்; முந்தும் அழகு - முதன்மையான அழகு; மூன்று தமிழ் நாடு - சேர சோழ பாண்டிய நாடுகள்.
(21-25) இணை - ஒப்பு: செழுங்கானம் - வளமான காடு: செழுமை+கானம் - பண்புத்தொகை; காமன் கணை - மன்மத பாணம், காமத்தை விளைப்பது.
(26-30) நித்தம் - நாள் தோறும், சித்தம் - மனம், தேமொழியே -தேன் போன்ற இனிய சொல்லையுடையாய், மாலையிட - மணமாலை சூட்ட, மையல் காதல் மயக்கம், சால - மிகவும்- உரிச்சொல், சகிக்காமல் -பொறுக்க முடியாது.
(31-35) தேயம் எங்கும் - நாடு முழுதும், வேடர் கோன் -
வேடர்கட்கு அரசன் - 'மொட்டைப் புலியன்' என்பான்.