50
குயிற் பாட்டு
டையவள், பார்வேந்தர் - நாடாளும் அரசர், நத்தி - விரும்பி, விலைமகள் - தாசிப்பெண், பொன்னடி - பொன் போன்ற பாதம் உவமைத் தொகை.
(91 - 95) கலக்கம் - துயரம், மிஞ்சும் - பெருகும், விழி குறிப்பு - கட்பார்வை, பளிச்சென்று - விரைவாக, திடீரென்று
(96-100) காமியர் - காமவெறி கொண்டோர், நெறி ஏது முறை என்ன உண்டு, 'காமத்திற்குக் கண்ணில்லை' என்பது பழமொழி, புத்தமுது - புதிய அமுதம் போன்றவளே : புதுமை + அமுது - அடையடுத்த உவமையாகு பெயர் மனையாட்டி - மனைவி, அரசாணி - அரசி.
(101 - 105) துணை - வாழ்க்கைத் துணைவி, ஐயுறுதல் - சந்தேகப்படுதல்.
(106 - 110) வேதநெறி - வைதீகச் சடங்கு முறை, வலக்கை தட்டிவாக்களித்தல் - வலது கையில் அடித்து சத்தியம் செய்தல், பூரிப்பு - மன மகிழ்ச்சி, வாரிப் பெருந்திரை - கடல்வெள்ளம்.
(111 - 115) திண்டோள் - திண்மை + தோள் - வலியை வாய்ந்த தோள், இதழில் தேன் பருகல் - உதட்டில் ஊறும் எச்சிலாகிய வாயமுதம் உண்ணுதல்.
(116 - 120) ஆரத் தழுவி - இறுக அணைத்து, கோவை இதழ் - கொவ்வைக் கனி போன்று சிவந்த மெல்லிய உதடு, கூத்து - விளையாட்டு, குதூகலம் - மகிழ்ச்சி.
(121 - 125) ஆத்திரம் - ஆசை, மன்ணாக்கி விட்டாள் - கெடுத்துவிட்டாள்.
(126 - 130) நிச்சயதாம்பூலம் - திருமணத்திற்கு முன் உறுதி செய்து கொள்வது; சிறுக்கி - இளம்பெண், பேதகம் - மாறுபாடான செயல், மனதில் எழுகின்ற தீ - கோபம்.
(131 - 135) தோப்பு - மரத்தொகுப்பையுடைய சோலை, ஈரிரண்டு பாய்ச்சல் - நான்கு குதி, நீரோடும் மேனி - வியர்வை சிந்தும் உடம்பு, நெருப்போடுங்கண் - கோபத் தீப் பறக்கும் கண்.
(136 - 140) எட்டி நிற்கும் செய்தி - தூரத்தில் நிற்கும் செயல், ஆர்ந்திருக்கும் செய்தி - கூடியிருக்கும் செயல்.
(141-145) இருவர் - மாடனும் குரங்கனும்,மற்றவன்
குரங்கன், தேவர் சுகம் - தேவர் உலக இன்பம் போன்ற இன்பம்.