பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பதிப்புரை

காட்டுகின்றது. இக்குயிற் பாட்டின் அருமை பெருமைகளை முகவுரையிற் காண்க.

வித்துவான் முதல்நிலை வகுப்புத் தேர்வினுக்குரிய இலக்கிய நூல்களுள் ஒன்றாக இதனையும் சென்னைப் பல்கலைக் கழகத்தார். சேர்த்துக் கொண்டிருப்பதனாலும் இதன் சீரிய மாண்பு நன்கு விளங்கும்.

இவ்வினிய குயிற் பாட்டிற்குத் திரு. நவந்த கிருட்டிணனவர்கள் அரிய, இனிய குறிப்புரையும், நூலின் சாரமே என்று போற்றத் தகும் முன்னுரையும் எழுதி உதவியுள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.

இந்நூலும் குறிப்புரையும் என்றும் நின்று நாட்டு மக்களுக்கு நலம் பயக்கவேண்டும் என்னும் விருப்பத்தால் நாங்கள் இதனைப்பதிப்பித்து வெளியிடலானோம். இந்நூலை மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றவர்களும் வாங்கிப் பயின்று பயன் பெறுவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.