பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ இரவெல்லாம் நின்னைக் காளுத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னேக் கண்டவுடன் நின்னெளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா? நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிருளா? உங்களுக்கு மரணமில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன். ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன். சக்தி என்ற தலைப்புள்ள மற்ருெரு புதுக்கவிதையில் யாப்பைத் தாண்டி எவ்வாறு ரசம் பொங்கி யெழுகின்றது என்பதைக் காணலாம். பாம்புப் பிடாரன் குழலூது கின்ருன். "இனிய இசை சோகமுடையது' என்பது கேட்டுள் ளோம். ஆனல். இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோக ரஸ்ந்தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங் களே அடுக்கிக்கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிருன்? "தானதந்தத் தானதந்தத் தா-தனத் தானதந்தன தானதந்தன தாதத்தனத்தன தந்தனத்தன. தா." அவ்விதமாகப் பலவகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாகித்துக்கொண்டு போகிருன். இதற்குப் பொரு ளென்ன? ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்ல லாயிற்று: