பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

梦 'காளிக்குப் பூச்சூட்டினேன், அதைக் கழுதை யொன்று தின்ன வந்ததே பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது. பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள். அவள் வாழ்க." பராசக்தியைப்பற்றி ஒரு சிறந்த கவிதையையும் புதுக் கவிதையில் பாரதியார் எழுதியிருக்கின்ருர். 'பராசக்தியைப் பாடுகின்ருேம். இவள் எப்படி உண்டாயினுள்? அதுதான் ெ தரியவில்லை. இவள் தானே பிறந்த தாய்; தான்' என்ற பரம் பொருளி னிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினுள்? 'தான் என்ற பரம் பொருளிலிருந்து எப்படித் தோன்றினுள்? தெரியாது. படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது. சாவு நமது கண்ணுக்குத் தெரியும். அறிவுக்குத் தெரியாது: வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல். உள்ளம் தெளிந்திருக்க: உயிர் வேகமும் சூடும் உடைய, தாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க. மஹாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல். நாம் வாழ்கின்ருேம்: நம்மை வாழ்வுறச் செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்ருேம்.' கண்ணன் பாட்டுக்கு முகவுரை எழுத வந்த திரு. வ. வே. சு. ஐயர் அவர்கள் நாயகா நாயகி பாவத்தைக்