பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திரு. W. கிருஷ்ணசாமி ஐயரோ பழுத்த மிதவாதி. அனேகமாக வாரந்தோறும் பாரதியாருடைய கடுமையான தாக்குதலுக்கு இலக்காவார். அவரிடமா இந்த உதவியை நாடுவது? போனல்தான் பலிக்குமா? என்று தமது ஐயத்தைத் தெரிவித்தார் பாரதியார். அதற்கு "அவருடைய சுபாவம் உங்களுக்குத் தெரியாது. நீர் கூட வாரும்” என்று இழுத்துக்கொண்டு போனர் G. A நடேசன். மாலே நேரம். ஒரு புதிய மனிதருடன் நடேசன் வந்திருப்பதை அறிந்து, யார் என்று விசாரித்தார் கிருஷ்ணசாமி ஐயர். "இவர் ஒரு தமிழ்க் கவிஞர். சில நல்ல பாடல்களை இயற்றியிருக்கிரு.ர். வேண்டுமானல் பாடச் சொல்லு கிறேன், என்று கூறிவிட்டுத் திரு. நடேசன் பாரதியாரைப் பாடும்படி தூண்டினர். பாரதியார் தாம் எழுதிய மூன்று பாடல்களையும் உணர்ச்சி பொங்கப் பாடி முடித்தார். சிறந்த ரசிகரான திரு.V. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் சாய்ந்துகொண்டு பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு நிமிர்ந்து எழுந்து உட்காரவேண்டும் என்று தோன்றியதால் அவ்வாறே செய்தார். பாடல் முடிந்ததும், 'இவ்வளவு நல்ல பாடல்களே வைத்துக்கொண்டு மறைந்து கிடப்பானேன். இவற்றை நன்கு பரவச்செய்ய வேண்டாமா? ஏன் சும்மா இருக்கிறீர்?" என்று கேட்டார். நண்பர் நடேசன் அவர்கள், கவிஞரின் நிலைமையை நயமாக விளக்கினர்.