பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 'நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை சொல்வாரடி-கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி' இப்படி நையாண்டி செய்தும், பழித்து அறிவுறுத்தலு மாகிய பாடல்கள் எத்தனையோ! எல்லாம் தமிழரையும் பாரத நாட்டினரையும் தாழ்மை உணர்ச்சியிலிருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நிற்கச் செய்யத்தான். பாரத நாட்டின் பெருமை சொல்ல உயர்வு நவிற்சியே வேண்டாம். உள்ளது உள்ளபடி உணர்ந்து, தெரிவித் தால் போதும். "யாமறிந்த புலவரிலே கம்பனப்போல், வள்ளுவர் போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை' என்று, தமிழின் சிறப்பைக் கூறவந்த விடத்து முழங்குவார் பாரதியார். 'உண்மை வெறும் புகழ்ச்சியில்லை' என்று தீர்மான மாக அடித்துச் .ெ சா ல் லு வ ர |ர் பாரதியார். இளங்கோ, கம்பன், வள்ளுவன் என்று பலமுறை புகழ்ந்து கூறுவார், தம் கவிதையிலும் உரைநடையிலும். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எவ்வளவு வலிமையுடையதாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடி விடுதலை பெற முதலில் துணிச்சல் வேண்டும். அதற்கு வேண்டுவது யாது? முதலில் அச்சம் என்ற பேயை அடியோடு மக்கள் உள்ளத்திலிருந்து தகர்த்தெறியவேண்டும். 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பண்டாரப் பாட்டு, பாரதியாருடைய மந்திர சக்தியினல் அச்சம் தொலைவதற்கான உணர்ச்சியை ஊட்டுகிறது. அச்சமில்லை அச்சமில்லை என்று கூறத் துணிந்தவன், பின்பு வீர அபிமன்யு போல எதற்கும் அஞ்சா நெஞ்சத்தன் ஆகி, துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் துச்சமென மதித்து முன்செல்கிருன், பாரதியாருடைய கவிதைகளால்.