பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 குழந்தைகளே வளர்த்தது. இப்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்று வந்தது, இந்த நல்ல இந்திய தேசத்தின் மண்ணிலேயேயாகும். ஆதலால், இதை வந்தேமாதரம், வந்தேமாதரம் என்று வணங்கித் துதியேனே!" இது சிறிய கவிதையாக இருந்தாலும் மகாகவி பாரதியார் தமது உணர்ச்சிப் பிழம்புகளையெல்லாம் இதில் கொட்டி வைத்திருக்கின்ருர். இது அமரத்துவம் வாய்ந்த கவிதையாகும். சிறுசிறு தேச பக்திப் பாடல்கள் இல்லை என்ற குறையை அடியோடு போக்கிவிட்டார் பாரதியார். அந்தப் பாடல்கள் என்றும் உணர்ச்சி தரக்கூடியனவாக விளங்குகின்றன. உயிர்த்துடிப்போடும், வீ ரா வே ச த் தோடும் மின்னல் பாய்வதைப்போலப் பாரதியாருடைய கவிதைகள் விளங்குகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கமே இவற்றைக் கண்டு பதைபதைப்புக் கொள்ளும் நிலைமை உண்டாகிவிட்டது. காங்கிரஸ் மேடை என்ருல் அங்கு பாரதியாருடைய பாட்டுகள் பல முழங்குவது வழக்கமாகி விட்டது. ஒரு மணி நேரம் வீராவேசமாக ஆரவாரத் தோடு சொற்பொழிவு நிகழ்த்துவதைக்காட்டிலும் பாரதியாருடைய ஒரு பாடலைப் பா டி வி ட் டா ல் போதும். அதனால், அரசாங்கம் அஞ்சி, பாரதி நூல் களுக்குத் தடைவிதித்தது. ஆனல், அது அரசாங்கம் எதிர்பாராத விளைவுகளையெல்லாம் விளைவித்துவிட்டது. இப்படியாகப் பாரதியார் தேசபக்திப் பாடல்கள் பாடுவதில் மிகுந்த வெற்றி பெற்றுவிட்டார். பாரதியார் தக்க சமயத்தில் தோன்றினர். வீராவேசக் கனல் பெருகும் தமது பாடல்களைப் பாடினர். உறங்கிக்கொண்டிருந்த தமிழகம் அவருடைய தேசீயப் பாடல்களால் விழிப்புற்றது.