பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இக்கவிதை எல்லாருக்கும் எளிதில் புரியக்கூடியது. மாலைப்பொழுதில் கவிஞர் தாம் கண்ட ஒரு காட்சியினைச் சொல்லுகின்ருர். மாலை வேளை எல்லாருக்கும் இன்பம் தரக்கூடியது. அந்த வேளையிலே நேரம் கழிவதிலும் நினைப் பின்றி மாலை அழகினைச் சுவைத்துக்கொண்டிருந்தாராம். அப்பொழுது மெதுவாக வந்து கண் மறைக்கும் விளையாட்டைச் செய்கிருள் ஒரு நங்கை. உடனே கவிஞர் அவளின் இரண்டு கரங்களையும் பற்றிக்கொள்கின்ருர்: பட்டுடை வீசும் நறுமணத்தாலும் அறிந்துகொள்கின்ருர், அதற்கு மேலே ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில்’ என்ற மிக அழகானச் சொற்களைப் பயன்படுத்தி அறிந்துகொள் கிருர் நம் கவிஞர். 'வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா! மாயம் எவரிடத்தில்?' என்று கேட்கின் ருர். 'சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே நெரித்த திரைக்கடலில என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்னகண்டிட்டா ? திரித்த நுரையிடத்து என்னகண்டிட்டாய்? சின்ன குமிழிகளில் என்னகண்டிட்டாய்? மேகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாயே அதில் அதில் கண்டிட்டாய்?" என்று கேட்கின்ருர். அப்பொழுது உடனே பதில் வருகின்றது. 'நெரித்த திரைக்கடலில நின்முகங்கண்டேன்: நீல விசும்பினிட்ை நின்முகங்கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்; இன்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம்அளந்தே பெற்றதுநின் முகமன்றிப் பிறிதொன்றிலை சிரித்த ஒலியினில்நின் கைவிலக்கியே திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்"