பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 முடியாததான தராசு முனையை நம் ஆசிரியர் நிறுத்த வில்லை என்று நாம் குறை கூறலாமா? 'இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்கும் பேரிலக்கிய மாகக் கொள்ளவேண்டுவதில்லை. ஆசிரியர் இந்நூலில் கவி என்கிற ஹோதாவில்தான் நம்மிடம் வருகிருர் என நினைக்கவேண்டும். கவிதை ரீதியாகப் பார்க்கும்போது, இக்கீர்த்தனங்களுள் பெரும்பாலானவையிலுள்ள சுவை தேனினும் இனிதாயிருக்கிறது.' 'இன்னென்று. கவிதை அழகை மாத்திரம் அனுபவித்து விட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்துவிடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலானவை தாளத் தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக் கின்றன. கடற்கரையில், சாந்தி மயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக் கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில் புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பளு கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒ வ் .ெ வா ரு வ ரு ம் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.” சிறந்த திறனாய்வாளரான திரு. வ.வே.சு. ஐயர் அவர்கள் புதுக்சேரியில் இருக்கும்போது பாரதியாருடைய பாடல்களை அவரே கேட்கும்படியான வாய்ப்பைப் பெற்றிருக்கிரு.ர். ஆகவே, நாம் அதைப் பணிவோடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்வோம். கண்ணன் பாட்டு விலைமதிக்க முடியாத ஒரு கருவூலம். அது என்றும் நிலைத்து நிற்கும்படியான அமரத்துவம் வாய்ந்தது. அதன் புகழ் படிக்கப் படிக்க ஏறிக்கொண்டே போகும். கண்ணம்மா-என் குழந்தை' என்ற கவிதையும் 'கண்ணன்-என் சேவகன்” என்ற கவிதையும் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களாகும்.