பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 படைத்தாயே, அதற்கு ஈடு இணையே இல்லை." "கானமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா’ என்று தமது மிகச் சிறந்த பாராட்டுதல்களைக் கீழ்க்கண்ட அடிகளில் தெரிவிக் கின்ருர் : "...படைப்புக் கடவுளே! நான்முகனே! பண்டே யுலகு படைத்தனை நீ என்கின் அர். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய். காற்றைமுன்னே ஊதினய், காணரிய வானவெளி தோற்றுவித்தாய், நின்றன் தொழில்வலிமை யாரறிவார்? உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஒட்டுகின்ருய்: எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய், அம்மாவோ! காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத்தாய்: ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்; சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே! சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார்யார்? ஆனலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே, கானமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!' பாரதியாருக்கு இருந்த இசைப்பற்றை இதற்குமேல் உயர்வாகக் கூற முடியாது. 'குயில் பாட்டு என்ற கதையில்லாது போனல் இசைக் காகவே எழுந்த பாராட்டுதல் என்று கூறிவிடலாம். ஆனல், குயிலின் மர்மமான கதை ஒன்றைப் பாரதியார்