பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மீண்டும் காதல் கை கூடி இன்புறலாம்' என்று கூறிவிட்டு உயிர் துறக்கிருன். இவ்வாறு தன் முற்பிறவிக் கதை கூறிய குயில், 'மாடன் மாயத்தால் இப்பிறவியில் குயில் உருவம் பெற் றேன். நான் கூறியதை நம்பினால் நம்புங்கள், நம்பா விட்டால் அந்த உடைவாளை கொண்டு என்னைக் கொன்று விடுங்கள்' என்று கூறிவிட்டு அது கவிஞர் கையிலே விழுந்தது. பெண்ணென்ருல் பேயும் இரங்கும் அல்லவா? கவிஞர் தாம் முன்பு கொண்ட கோபத்தையெல்லாம் மறந்து, அன்புடன் குயிலே முத்தமிடுகின்ருர். உடனே அக்குயில் ஒர் அழகான மங்கையாக மாறுகின்றது. அவள் அழகைக் கண்டு, கவிதையிலும் இசையிலும் நாட்டியத் திலும் தாம் கொண்டிருந்த உயர்ந்த பற்றுதலின் காரணமாக, மீண்டும் ஒரு முறை அந்த அழகினை வர்ணிக் கின்ருர்: “...... கவிதைக் கனியிழிந்த சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனேடே இன்னமுதைத் தான்கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியிஞல் மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.: இது அழகின் வர்ணனையிலே ஓங்கி வளர்ந்த சிகரமாகத் திகழுகின்றது. இனி, குயில் பாட்டின் நுட்பத்தைக் கண்போம். குரங்கு, சலித்துக்கொண்டிருக்கும் மனத்தைக் குறிக்கும். மாடன் என்பது, ஆணவம், மாயை, காமியம் என்ற மூவகை மலங்களுள் முக்கியமான ஆணவத்தைக் குறிக் கின்றது. இந்த இரண்டையும் அடக்கினல் ஜீவாத்மா,