பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கந்தர்வலோகத்தைப்பற்றி வருணித்த பாரதியார் மண்ணுலகத்தைப்பற்றியும் வர்ணிக்கிருர், பாருங்கள்: 'எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துகளுக்கப்பால், ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூலி கொடுத்து வாஸம் செய்து கொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அந்த வீட்டைக் கொஞ்சம் வர்ணிக்கலாமா? கந்தர்வநாட்டைப் ப ற் றி க் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள லெளகரியங்களைப்பற்றிச் சிறிது கேளுங்கள். நானிருந்த வீட்டிற்கு முன்பக்கத்திலே ஒர் கூடமும், அதைச் சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்கே பார்த்த வீடு. அந்தக் கூடத்திற்குத் தென்புறத் திலே ஒரு முற்றம். இது முன் பகுதி. பின்பகுதியிலே சில அறைகள், ஒரு மு ற் ற ம், மேல்மெத்தை; அதில் இரண்டறைகள். இவ்விரண்டு பகுதிகளுக்குப் பொது வாகத் தென்பாரிசத்திலே கொல்லைப்புறத்தில் ஒர் கிணறும் தண்ணிர்க் குழாயும் உண்டு. பின்பகுதியில் நான், என் சிறிய தாயார், மனைவி, மைத்துணிப் பெண், தம்பி, எனது குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ஒரு ராயர், பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ, ஒர் உத்தியோகம். உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வலித்தார்கள். நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடமென்று ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும். ராயர்