பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 என்று மறுத்துவிடுகிரு.ர். துரியோதனன்பால் திருத ராஷ்டிரன் மிகுந்த பாசம் வைத்திருப்பதை அவர்கள் இருவரும் அறிவர். ஆகவே தன் திட்டத்திற்குத் தந்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகப் பாசாங்கு செய்கிருன் துரியோதனன். "நைய நின்முனர் என்சிரங் கொய்தே நானிங் காவி இறுத்திடு வேல்ை; செய்ய லாவது செய்குதி என்ருன்: திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான்." ஆகவே, திரு தராஷ்டிரன், துரியோதனன் சூழ்ச்சிக் கெல்லாம் இணங்க வேண்டியதாயிற்று. விதுரனையே தூதாக அனுப்புவதென்று தீர்மானம் செய்தார்கள். தருமனும் துரியோதனன் உண்டாக்கிய மாளிகையைப் பார்க்க வருவதற்கு இசைந்தான். விருந்துக்குப் பிறகு பொழுது போக்காகச் சூதாடலாம் என்கின்ருன் சரு னி. அதற்குத் தருமன் முதலில் மறுக் கிருன். பின் சூ காடச் சம்மதித்துவிடுகிருன். ஏன், நாட்டையே வைத்து ஆடவும் துணிகிருன். இது, நம் கவிஞருக்குச் ச ற் று ம் பிடிக்கவில்லை. கடமையை மறந்து இப்படி ஆடுவதா என்று கண்டனம் செய்கிரு.ர். கோயில் பூசை செய்பவனுக்குப் பூசை செய்ய உரிமை உண்டு. ஆனால், கோயில் சிலையை விற்பதற்கு உரிமை இல்லை. தருமன் மிக அற்பமான காரியம் செய்துவிட்டான்' என்று வன்மையாகக் கண்டிக்கிரு.ர். 'கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத்தி ழத்தல் போலும்,