பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


“என்ன கூறி மற் றெங்கன் உணர்த்துவேன்;
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே."

என்று நொந்து கொள்கிறார்,

இக்கருத்துகளைப் பாரதியார் தமது வரலாறு கூறும் ‘சுயசரிதை’ப் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளதை நினைக்குங்கால் தமிழரது வாழ்வைத் தம் வாழ்வுடன் எவ்வாறு இயைத்துள்ளார் என்பது புலனாகின்றது.

இப்புலப்பாட்டுடன் தாம் தேர்ந்தெடுத்த முப்புலவரது தன்மைகளையும், அவர்தம் இலக்கியங்களின் இயல்புகளையும், வாய்ப்பு நேரும் போதெல்லாம் முறையாகப் பதித்துள்ளார் என்பதும் வெளிப்படுகின்றது.

ஆம், ‘முறையாகப் பதித்துள்ளார்’ என்றே அதனைக் குறிக்க வேண்டும். ‘மறவாமல் மேற்கோள் காட்டியுள்ளார்’ என்று அதனைக் குறித்தல் கூடாது. ஏனெனில், பாரதி தமிழ் இலக்கியங்களை நோக்கிய நோக்கு மேற்கோள் நோக்கு அன்று; உட்கோள் நோக்கு. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் ஒவ்வோர் உள்ளீடு உண்டு. அவ்வுள்ளீடு அந்நூல்முழுமையும் இழையோட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும். பாரதியார் தாம் குறித்த இலக்கியங்களில் அவ்வுள்ளீடுகளைத் தொட்டு உணர்ந்தவராய்ப் பேசியுள்ளார்.

இலக்கியத்தில் கவிஞன் உள்ளம்.

‘தாமறிந்த புலவர்களாகிய மூவரைப் போல் உலகில் எங்குமே பிறந்ததில்லை’ என்று முழங்கி உறுதி செய்யும் அவர் அந்நூல்களில் எத்துணை அளவு ஈடுபாடு

15