பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




“நூல் பல கல்” என்றார் ஔவையார். அதற்கு விளக்கமும் திருத்தமுமாகப் பாரதியார், “நூலினைப் பகுத்துணர்” என்றார்.

ஔவையார் கருத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பாரதி காட்டிய தொடர்கள் உண்டு. “இளமையில் கல்” ஔவை. “கற்றது ஒழுகு”-பாரதி. இவற்றிற்கு மேலும் பாரதியார் பகுத்தறிவுப் பாதையில் நின்று,

“சோதிடந்தனை இகழ்”
“தொன்மைக்கு அஞ்சேல்”
“புதியன விரும்பு”
-என்றெல்லாம் முழக்கினார்.

எவ்வாறாயினும் ஔவையார்பால் பாரதிக்கிருந்த பெருமதிப்பு அவரால் மிக நன்றாக முத்திரையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கோள்களாகக் கம்பரது “சாணிலும் உளன்” என்னும் செய்யுளையும், நாலடியாரது “அகடுற யார்மாட்டும்” என்னும் அடிகளையும் திருநாவுக்கரையரது “கற்றுனைப் பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும்”“அங்கமெலாம் குறைந்தழுகுதொழு நோயராய்” என்னும் அடிகளையும், பிற சிறுநூல்களின்-தொடர்களையும் மேற்கோள்களாககாட்டியுள்ளமை அவரது இலக்கியப் புலமையுடன் ஆர்வத்தையும் காட்டுவதாகும்.

உரைத் திறவுகோல் பாரதி

இலக்கியப் பார்வையில் உரைப்பார்வை ஓர் உள்ளீடு செய்யுளைப் படிப்பவர் . அதன் உள்ளீடான பொருளைக் கண்டுகொள்கின்றனர். கண்டுகொள்ள இயலாது பூட்டப் பட்டுள்ள பூட்டிற்கு உரைதான் திறவுகோல். இலக்கியத்தைப்

62