பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.—udsig_SU)Q 95

நமது கலைகள், ஆடல், பாடல், இசை, கவிதை, இலக்கியம் முதலியவற்றை உலகறியச் செய்ய வேண்டும். நமது நாட்டு வைத்திய முறை மருந்தியலை அபிவிருத்தி செய்ய வேண்டும். நமது மனித வளம் மிகவும் உயர்வானது அதை மேலும் உயர்த்த வேண்டும். உலகத்திற்கு உதவியாக, வழி காட்டியாக அமைய வேண்டும்.

இவ்வாறு பாரத சமுதாயத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது பாரதியின் சிந்தனை.