பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உலக வாழ்க்கையின் பயன் 100

“அஞ்ஞானத்தை வென்றால் தீராத இன்ப நிலை எய்தி வாழலாம்” என்று சாஸ்திரம், யுக்தி, அனுபவம், ஆகிய மூன்று பிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும் அந்த அஞ்ஞானப் பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாத்ஸ்ர்யம் என்ற ஆறு எம தூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டிய போதிலும் மனம் அவற்றில் நிலை பெறாமல் மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டு போய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப் போய் விடுகிறது. ஆகையால் புத்தியை நம்பி எவனும் மனத்தை கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடாமல், விடாமல் பயிற்சி செய்வதே எல்லா வித யோகங்களிலும் சிறந்த யோகமாகும். மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில் புத்தி சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை புத்தி தடுத்த போதிலும் அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும் சக்தி மனதுக்கு இருக்கிறது. is

“ஆதலால் மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும் போது அதை உறுதி அல்லது தைரியம் என்ற கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சி ஏற்படுத்திக் கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக் கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவேறு திருப்பியும் பழகுகிறார்கள். தனியே இருந்து ஜயம் பண்ணிப் பார்க்கிறார்கள்.