பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15டஇந்துக்களின்_சிறப்பு 125

"பேரானந்தம் பேசி மறையனந்தருசொலும், பெரிய மெளனத்தின் வைப்பு”

என்று தாயுமானவர் காட்டினார்.

இராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹறிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே கலி நீங்கி விட்டது என்று பாரதி தனது கட்டுரையில் கூறுகிறார்.

லகூதிமி தேவி எந்த இடத்திலும் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை என்று பாரதி குறிப்பிடுவது தனி நபருக்கு மட்டுமல்ல ஒரு நாட்டிற்கும் பொருந்தும். ஆயினும் நாடுகளில் அதன் இயற்கை வளம், மனித வளம் ஆகிய இரண்டும் சிறப்பாக இருக்கும் போது அதன் செல்வத்தின் சராசரி நிலைக்கு எப்போதும் குறைவில்லை. அதற்குள்ள ஒரே நிபந்தனை அதன் சுதந்திரமேயாகும். பாரதம் அவ்வாறு சிறந்த இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்த நாடாகும். இது செல்வ வளம் மிக்க நாடாகும். ஆயினும் இது இப்போது ஏழை மக்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஏழ்மைக்குக் காரணம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாம் அனுபவித்த ஆக்கிர மிப்புகளும், படையெடுப்புகளும், துன்ப துயரங்களுமேயாகும். பாரத நாடு திருமகளின் பிறப்பிடம். நமது நாட்டு மக்களின் உழைப்புத் திறனுக்கு ஈடு இணையே இல்லை. ஆயினும் நமது மக்களுக்கு சில சமயங்களில் கும்பகருணத் துக்கம் ஏற்பட்டு விடுகிறது. இப்போது அந்த சாபம் நீங்கி விட்டது. நாம் சுதந்திரம் புதிய சுதந்திரத்தைப் பெற்று விட்டோம். நமது மக்களின் உழைப்பின் திறத்தால் நமது நாட்டை மட்டுமல்ல உலகின் பல நாடுகளையும் வளப்படுத்தியிருக்கிறோம். உடல் உழைப்பாளர் மட்டுமல்ல. தேயிலைத் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் மட்டுமல்ல. இக்காலத்தில் நமது தொழில் நுட்ப நிபுணர்கள், அறிவுச் செல்வர்கள், விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள்,