பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLTT LLL LLLLLL LLL LLL LLLLL LLLLLLLLLLLLSK LLLLLS 000

பேராசிரியர்கள், வர்த்தகர்கள் இவ்வாறு பலவேறு துறை நிபுணர்களும் இல்லாத நாடில்லை. இல்லாத தொழில்களும் பல்கலைக் கழகங்களும் இல்லை.

நமது நாட்டு மக்களில் பெண்களுடைய உழைப்பும் "பஞ்சமர்கள்” “சூத்திரர்களின்” உழைப்பும் தனிச் சிறப்பு மிக்கது. இவர்களின் உழைப்பு இல்லாதிருந்தால் இந்த நாடு எப்போதோ செத்திருக்கும். இவர்கள் இந்திய நாகரிகம் உறுதியுடன் நிற்பதற்கான வலுவான வைரத் துரண்களாகும். அனைத்து தொழில்களிலும் பெண்கள் பாதி. விவசாயத்தில் உழவும் சீரமைப்பும் ஆண்கள் பணியென்றால், நடுகையும், களையெடுப்பும், பெண்கள் அறுவடை இருவரும் சேர்ந்து நெசவுத் தொழிலில் பாவும் நெசவும் ஆண்கள் என்றால் தார் சுற்றுவதும், கண்டு சுற்றுவதும் பெண்கள், கடலுக்குள் சென்று மீன் பிடித்தலில் மீன் பிடித்தல் ஆண்கள் என்றால் அதை சுமந்து சென்று விற்பனை செய்வது பெண்கள், கால்நடை பராமரிப்பில் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகளில் ஆண்கள் என்றால், பால் கறத்தல், தயிர், மோர், வெண்ணெய், நெய் தயாரித்தல் அவைகளை விற்பனை செய்தல் பெண்கள் இவ்வாறு பல தொழில்களிலும் சரிபாதி பெண்கள் பணியாற்றுகிறார்கள். அத்துடன் பெண்கள் வீட்டு வேலைகளையும் குழந்தைகள் பராமரித்தலையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் நாடு விடுதலை பெறுவதோடு நமது நாட்டுப் பெண்களும் நமது பஞ்சமர்கள், சமுதாயத்தின் களங்கம் நீங்கி முழு விடுதலை பெறுவார்களானால் நமது உழைப்பின் திறன் மும்மடங்கு அல்ல பல மடங்கு பெருகும். பொலிவு பெரும். வையத் தலைமையை

பாரதம் அடைய முடியும்.

xx xx xx