பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. Ritõögjësēit iumiï? 15B

பாதிரியார்கள் ஆகியோரின் பணிகள் பற்றி விரிவான விவாதங்கள் நடைபெற்றது. அவ்விவாதங்களில் ஒரு சாரார் நாம் மதப்பிரச்சாரங்கள், வழிபாடுகள், மதச்சடங்குகளுடன் நமது பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொதுப் பிரச்னைகளில் தலையிட வேண்டாம் என்று கருத்துக் கூறினார்கள். மற்றொரு சாரார் அப்படியல்ல, நாம் மதப் பிரச்சாரம் மற்றும் வழிபாடுகளுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. கல்வி, சுகாதாரம், வைத்தியம், திருவிழாக்கள் மற்றும் பலவேறு சமுதாயப் பணிகள், சமூக சீர்திருத்த இயக்கங்கள் முதலியவற்றிலும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து பணியாற்ற வேண்டும், என்று கருத்துக் கூறினார்கள் என்று அந்த செய்திகள் தெரிவித்தன. இவ்வாறு சில கிறிஸ்தவ சபைகள் பலவேறு சமுதாயப் பணிகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்து மதத்திலும் சமயச் சார்ப்ான பல அமைப்புகள் இருக்கின்றன. மடங்கள், பலவேறு ஜனசபைகள் நாடு முழுவதிலும் இருக்கின்றன. அவைகளின் பிரதிநிதிகளின் மகாசபைகள் மகாநாடுகள் கூடித் தீர்மானங்கள் எடுத்து எல்லாக் குடியிருப்புப் பகுதிகளிலும் சமயப் பிரச்சாரம் செய்தல், கோவில்கள் கட்டுதல், பழைய கோவில்களைப் புதுப்பித்தல், திருவிழாக்கள் நடத்துதல், ஆலய வழிபாடுகள், பூசைகள் நடத்துதல் முதலிய பணிகள் செய்வது அத்துடன் பள்ளிக் கூடங்கள் அதில் முக்கியமாக ஆரம்பப் பள்ளிகள் நடத்தி மக்களுக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் எழுத்தறிவித்தல், ஆஸ்பத்திரிகள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், சுகாதாரப் பணி நமது நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஊருணிகள், குளங்கள், திருக்குளங்கள் முதலியனவற்றைச் சீரமைத்தல், சாலைகள் அமைத்தல், ஆலயங்களில் அன்னதானம் போன்ற சமூக சேவைகள் நிவாரணப் பணிகள், குடிதண்ணிர் ஏற்பாடு செய்தல் முதலியவைகளைச் செய்தால் மெத்தப் பயனுள்ளதாக இருக்கும். வாசக சாலைகள், படிப்பகங்கள், நூலகங்கள், வேதப் பாட சாலைகள்