பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLLL LLLLLL LLL LLLCLL LLCL LLLLLLTT LLLSK LSLSLSLS

27. பிராமணன் யார்? :

பிராமணன் யார் என்னும் தலைப்பில் ஒர் உபநிஷத்தின் கருத்தை பாரதி இங்கு விவரித்துக் கூறுகிறார்.

“அஷ்டாத ச உபநிஷத்துக்களிலே வஜ்ர ஸ9சிகை என்பதொன்று. வஜ்ரஸஅசி என்றால் வைர ஊசி என்று பொருள் . இவ்வுபநிஷதம்” பிராமணன் யார் என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கிறது.

“நான் பிராமணன், நீ சூத்திரன்’ என்று சண்டைபோடும் குணமுடையவர்களுக்கெல்லாம். இவ்வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலிஸ் வேவுத் தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணுலைப் போட்டுக் கொண்டு ஏதேனும் ஒரு நேரத்தில் கிராமபோன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்லுவதைப் போல் பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, அய்யர், அய்யங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக் கொண்டு, “நான் பிராமணன், நான் தண்ணிர் குடிப்பதைக் கூட மற்றவர்ண்த்தவன் பார்க்கலாகாது” என்று கதை பேசுகிறான். மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான். பஞ்சத்தினால் ஜனங்கள் சோறின்றி மடியும்போது அந்த தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும் பொருட்டு, 'பஞ்சமே கிடையாது, சரியான படி தீர்வை வசூல் செய்யலாம்” என்று ரிப்போர்ட் எழுதிவிடுகிறான். ஆறில் ஒரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம். பஞ்ச நாளில் அது கூடக் கேட்பது பெருங்குற்றம். அங்ங்னம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி. அதற்கும் அப்பால் உள்ள பஞ்சத்தை இல்லை என்று எழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்லுவதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு “சாஸ்திரியார்” என்று பெயர் வைத்துக்கொண்டு “நான்