பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. sríñ Agmför 2,5vsvgi umu$lärensir solensu TB4

விவாஹம் நடந்தபோது அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளைக்குப் பணம் கொடுத்தார்கள். பிறகு ருது சாந்தியின் போது அந்த மாப்பிள்ளை “ஐநூறு ரூபாய் கொடுத்தால் தான் ருது சாந்தி செய்து கொள்வேன். இல்லாவிட்டால் பெண் உங்கள் வீட்டோடே இருக்கட்டும்” என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் தண்டம் வாங்கிக் கொண்டான்.” என்று பாரதியார் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

பாரதியாருடைய இந்தக் கட்டுரை அக்காலத்தில் மிகவும் பிரபலம். மணிக்கொடி காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் இந்தக் கட்டுரை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

வரதட்சணைக் கொடுமை ஒரு பெரிய சமுதாயக் கொடு நோயாகப் பரவியிருக்கிறது. அது பற்றி ஏராளமான கதைகள் சொல்லலாம். அவையெல்லாம் பற்றி இங்கு கூறுவதற்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை. இதைக் காட்டிலும் மானக்கேடானது எதுவுமில்லை. மக்களுடைய சமுதாய உணர்வுநிலை உயரும் போது தான் இந்தக் கொடுமை நீங்கும்.

பாரதி இந்தக் கட்டுரையில், பணம், பொதுக்கல்வி, விடுதலை மூன்றையும் வற்புறுத்திக் கூறுகிறார். இதில் பொதுக்கல்வி வேண்டும் என்று பாரதி குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது.

வரதட்சினையை எதிர்த்து பொதுக்கல்வியும், பொது இயக்கமும் தேவை. இதை வருங்காலம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

xx xx xx