பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLL LSLLLL LLS TCCLy MCMT LLLLLLTTySK LLLLLLLL S00

மேன்மேலும் செல்வம் பெருகும். ஆதாலால் தொழிலாளிகளே, கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்” என்று பாரதியார் எழுதுகிறார். தொழிலையும், கல்வியையும் இணைக்க வேண்டும் என்பது பாரதியாரின் தீர்க்கமான கொள்கையாகும்.

இக்கட்டுரையில் பாரதி சில முக்கியமான செய்திகளைக் கூறுகிறார். ஒரு அடிப்படையான பிரச்னை தொழில், கல்வி, செல்வம், அறிவு, ஆகியவற்றின் தொடர்பு இணைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை வரலாற்று அனுபவத்தோடு எடுத்துக் காட்டி அதற்கு சரியான விடையையும் முன் வைக்கிறார். இதில் இடையில் ஏற்பட்டு மக்களிடம் நிலவியிருந்த தவறான கருத்துக்களை மறுத்தும் தெளிவு படுத்துகிறார். இவைகளைப் பகுத்துப் பார்த்து நாம் இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு நாம் செயல் படுத்தவும் முயல வேண்டும்.

பாரதியின் இந்தக் கட்டுரை மூலம் சில கேள்விகள் எழுகின்றன. அதற்கும் நாம் கெளிவடைகிறோம்.

எலரஸ்வதி கலைமகள் கல்வக கடவுள லகூrlமி திருமகள் செல்வத்தின் கடவுள். இருவரும் சேர்ந்து ஒரு இடத்தில் இருக்க மாட்டார்களா? இருக்க மாட்டார்கள் என்று கூறுவது மடமை. இருவரும் ஒரிடத்தில் இருப்பார்கள். அதற்காக முயற்சி செய்யலாம் அதில் வெற்றி பெறலாம்.

கல்வி என்பது முதலில் எண்ணும் எழுத்தும். அது அத்தனைக் கல்விக்கும் அடிப்படை. எண்ணும், எழுத்தும் தோன்றுவதற்கு முன்பே வாய் மொழிப் பயிற்சி மூலம் கல்வி இருந்திருக்க வேண்டும். பயிற்சி மூலம் அறிவை வளர்க்கிறோம்.

மனிதன் தான் உயிர் வாழ்வதற்காக உணவு தேடும்போதும், இதர தேவைகளைப் பெறுவதற்காக உழைக்கும் போதும்,