பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. uGÉglu umieosu 204

கைத்தொழில்களுக்கும், விசேஷஸ்தலமாகி விளங்கி வந்தது. இக்காலத்தில் இந்தியா பஞ்சத்துக்கும் பசி மரணத்துக்கும் வறுமைக்கும், சிறுமைக்கும், தொத்து நோய்களுக்கும் சாசுவதஸ்தலமாயிருக்கிறது.

இந்திய தேசத்தார் அழிவுறுவது போல் மற்றப்படி பூமண்டலம் முழுவதிலும் எந்த நாட்டிலும் மனிதர் இவ்வாறு வருஷம் தவறாமல் வேறு காரணம் யாதொன்றுமில்லாமல் சுத்தமான பஞ்சக் காரணமாக பதினாயிரம் லக்ஷக்கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காண

முடியாது.

“கோடிக் கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்கும் என்ற நிச்சயமில்லாமலும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் ஒரு வேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப் பட்டினியால் கோர மரண மெய்தும் படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் கூடிணம் கூடச் சகித்திருப்பது ஞாயமில்லை என்பது சொல்லாமலே போதரும்.

“எனவே உலகத் துன்பங்கள் அனைத்திலும் கொடிதான இந்த ஏழ்மைத் துன்பத்தைச் சமாதான நெறியால் மாற்றக் கூடிய உபாயம் ஒன்றை நாம் கண்டு பிடித்து நடத்துவோமானால் அதனின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி உலகத்தார் எல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மை அடைவார்கள்” என்று பாரதி தனது கட்டுரையில் எழுதுகிறார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியாரின் நூறாண்டுகளுக்கு மேலான ஆக்கிரமிப்புப் போர்கள் நடத்திய காலத்திய கொள்ளை, போர்ப் படுகொலைகள், உள்நாட்டுத் தொழில்களின் நாசம், கால்நடைகளின் அழிவு, நீர் நிலைகளின் சேதங்கள், சாகுபடித் தொழிலின் சீரழிவு, ஆலயங்களின் சிதிலங்கள்,