பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. gthough Gugësi - - - 220

ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், துப்புரவுப் பணிகள், சிறிய நடுத்தர நீர் நிலைகளைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஆலயப் பாதுகாப்பு, பராமரிப்பு, சந்தைகள், கிராமச் சாலைகள், கலை, இலக்கியம், இசை, கூத்து, விளையாட்டு, முதலிய பணிகளையும் நிறைவேற்றுவதற்கு மக்கள் அமைப்புகள் உருவாக்கப் பட்டு அப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய மரபு வழியில் பாரதிக்கு ஏற்பட்ட சிந்தனையாகும். அதை பாரதி தனது பல எழுத்துக்களிலும் குறிப்பிடுகிறார், வெளிப்படுத்துகிறார். ஜனநாயகத்தில் அனைத்துப் பணிகளிலும் மக்கள் பங்கேற்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாகும்.

xox r^x x^x