பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்-221

3 6.அநந்த சக்தி:

சக்தி என்னும் சொல் பாரதிக்கு மிகவும் விருப்பமானது. அது அவருக்கு ஒரு தெய்வீக வார்த்தை அவருடைய உயிர் மூச்சு போன்றது. பாரதி சக்தி தெய்வங்களைப் பற்றி பல பாடல்களில் பாடியுள்ளார். லகூஷிமி, சரஸ்வதி, சக்தி, பராசக்தி, காளி, மாளி பற்றிப் பாடுகிறார். ஒரு காவியத்திற்கு பாஞ்சாலி சபதத்தைப் பாடினார். அதில் கடவுள் வாழ்த்தாக வாணியைப் பாடினார்.

பாரதி பராசக்தியை நோக்கி, "அடி உன்னைக் கோடி முறை தொழுதேன் - இனி வையத்தலைமை எனக்கருள்வாய் அன்னை வாழி என்று பாடுகிறார்.

எண்களைக் கண்டது பாரதம். அதில் சிறப்பாக பூஜ்யமும் அனந்தமும் பாரதத்தின் தனிப் பங்களிப்பாகும்.

சக்தியை அனந்தமாகக் கூறுகிறார் பாரதி. அனந்த நாயகி என்பது பாரதத்தின் செல்வி. அனந்தம் என்றால் அளவில்லாதது. கோடி கோடி பலகோடி நூறாயிரம் கோடி அதற்கு அதிகம் எண்ணத் தொலையாது. நாராயணன் அனந்தம் அவனுடைய சயனமும் அனந்த சயனம். அதுபோல சக்தி, மகாசக்தியும் அனந்தமாகும்.

பாரதிக்கு சக்திதாஸன், வாணிதாஸன் என்றும் பெயர்களும் உண்டு. அவர் வாணியின் அருளை, பராசக்தியின் அருளை ஆசியை வேண்டினார்.

அனந்தசக்தி என்னும் தலைப்பில் பாரதி ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார்.

"எறும்பு இறந்து போன புழுவை இழுத்துச் செல்கிறது. எதனால்? சக்தியினால், தூமகேது அநேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திசை வெளியில் மகா வேகத்தோடு