பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36-ിബാഖബ്_ –***

பின் நாட்டின் முன்னேற்றம் நமது குறிக்கோள். நாட்டின் வளர்ச்சி மேம்பாடு, மக்களின் நலவாழ்வு, மகிழ்ச்சி, உலக அங்கீகாரம் உலகப் பெருமை, பெருக வேண்டும். வையத்தலைமை ஏற்பட வேண்டும். பாரதம் லோக குருவாக வேண்டும். அதற்கு முன்னைக் காட்டிலும் மேலான நிலையிலான தேசபக்தியும், தெய்வபக்தியும் தேவைப் படுகிறது. பாரதி வழியில் நாம் இதை வலியுறுத்துகிறோம்.

நமது உழைப்பாளர்கள், கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் பெருமக்கள், படிப்பாளர்கள், ஆசிரியர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், அரசாங்கப் பணியாளர்கள், அதிகாரிகள், அரசியல் வாதிகள், பொது சமுதாயத் தொண்டர்கள், ஆட்சிப் பொருப்பாளர்கள், பலவேறு துறைகளில் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்கள், நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் நலன் கருதி தங்களை தங்கள் தங்கள் பணிகளில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். நாட்டு நலன் கருதித் தீமையற்ற தொழில் செய்ய வேண்டும், பணியாற்ற வேண்டும்.

கீதையின் வாசகங்கள் நமக்கு இவைகளில் வழி காட்ட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரின் அத்தகைய ஒருங்கிணைந்த உள்ளார்ந்த தேசபக்தி உணர்வை வளர்க்க வேண்டும். நமது தேச பக்த உணர்வை தெய்வ பக்தியுடன் ஒன்றிணைக்க வேண்டும். இத்துடன் நமது நாட்டின் பாரம்பரியப் பெருமை கொண்ட ஆன்மீக சக்தியை இணைத்து, தெய்வம் நீ என்று உணர் என்னும் பாரதியின் மகா வாக்கியத்தை நினைவு படுத்தி பாரதத்தை மகா பாரதமாக உயர்த்த வேண்டும். பாரதம் வையத் தலைமை பெற வேண்டும்.

பாரதி வாழ்க பாரதம் வாழ்க

வந்தே மாதரம்,