பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் I. 20

கேள்விகளைக் கேட்டார் - “இத்தனை பெரிய கூட்டமாக ஐயாயிரம் பெண்கள் இங்கு கூடியிருக்கிறார்களே, இவர்கள் இஷ்டபூர்வமாக வந்தவர்களா அல்லது ஏற்பாடு செய்து அழைக்கப்பட்டு வந்தவர்களா? என்று கேட்டார். பக்தர் பேரவை என்னும் பொது அமைப்பு இருக்கிறது. அது இஷ்டபூர்வமான தன்னார்வ அமைப்பாகும். அந்த அமைப்பின் பொது அழைப்பின் பேரில் இந்தப் பெண்கள் இஷ்டபூர்வமாகவே சொந்த ஆர்வத்துடன் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு தெய்வ பக்தியின் ஆர்வத்தில் கலந்து கொள்கிறார்கள். வந்தவர்களை ஒழுங்கு முறைப்படுத்தி வரிசைப் படுத்தி, தன்னார்வத் தொண்டர்கள் வரிசைப் படுத்தி நிகழ்ச்சியை நடத்தி வைக்கிறார்கள். அந்தத் தன்னார்வத் தொண்டர்களும் பெண்கள்தான் என்று விளக்கிக் கூறினேன்.

பெண்களுக்குப் போதுமான சுதந்திரம் இந்தியாவில் இல்லையென்று கேள்விப் பட்டோமே? என்று கேட்டார்கள். இந்தியாவைப் பற்றி முன்பு ஆட்சி நடத்திய ஆங்கிலேயர்கள் குறிப்பாக சில கிறிஸ்தவ மதகுருக்கள் பல பொய்யான பிரச்சாரங்களைச் செய்திருக்கிறார்கள். இந்தக் கோயிலின் தலைமைத் தெய்வம் மீனாட்சி பெண் தெய்வமாகும், சக்தி தெய்வமாகும். தாய்க்கு முதலிடம் கொடுக்கும் சாக்தம் இந்தியாவில் அனுஷ்டிக்கப்படும் ஒரு மதமாகும், ஒரு வழிபாடாகும். எல்லா நாடுகளில் உள்ளதைப் போலவே இங்கும் பெண்ணுரிமை பற்றிய பிரச்னை சில உண்டு. அவைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. அரசியல் சட்டப்படி இந்த நாட்டில் அனைவரும் சமம். ஆண்களும், பெண்களும் சமம். 18 வயது அடைந்தவர்கள் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒட்டுரிமை இருக்கிறது. மாதர் சங்கங்கள், பெண்களுக்கென சுய தொழில்களுக்கான சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள் இருக்கின்றன. நாட்டின் எல்லா துறைகளிலும் பெண்கள்